கொல்கத்தாவில் அமித் ஷாவுக்கு எதிராக கருப்புக் கொடி!

கொல்கத்தா சென்ற பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக அமித் ஷா அங்கு சென்றார்.

அந்தப் பகுதியில் நரேந்திர மோடி உருவங்களுடன் கூடிய பதாகைகளும், பிளெக்ஸ் போர்டுகளும், பாஜக கொடிகளும் ஏராளமாக காட்சியளித்தன. அந்த பதாகைகளுக்கு அருகாமையில் ‘அமித் ஷாவே, திரும்பிப்போ’, ‘மேற்கு வங்காளத்துக்கு துரோகம் இழைத்த பாஜகவை இங்கு அனுமதிக்க மாட்டோம்’ என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எதிர் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

விமான நிலையத்திலேயே அவருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு கருப்பு கொடிகளை காட்டி போராட்டம் நடத்தினர். அத்துடன், சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவைத்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அங்கு வந்த போலீசார் சாலையின் குறுக்கே இருந்த வாகனங்களை அகற்றி, அமித் ஷாவின் கார் செல்லவதற்கு ஏற்பாடு செய்தனர். அங்கிருந்து சென்ற அமித் ஷா பொதுகூட்டம் நடைபெற்ற மேடைக்கு பாதுகாப்பாக சென்றடைந்தார்.

More News >>