கேரள கனமழை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி
கேரளாவில் தொடர் மழை எதிரொலியால் வீடுகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.
கேரளாவில் கனமழை எதிரொலியால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக 50 ஆண்டுகள் இல்லாத நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. அணைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. இதன் எதிரொலியாக, கனமழை காரணமாக 32 பேர் பலியாகி உள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
இதன் பிறகு, மழை வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் இணைந்து கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கி உள்ளார்.