சமந்தா 80 வயது பாட்டியாக நடிக்கிறார்?

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்து வரும் சமந்தா அடுத்து ஓர் படத்தில் 80 வயது பாட்டியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரிய படத்தின் தழுவலாக எடுக்கப்பட்விருக்கும் அந்த படத்தில் சமந்தா 80 வயது பாட்டியாக நடிக்க இருப்பதாகவும் இதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்துக்கு பின்பும் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்திலும், கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து மற்றும் ஓர் படத்திலும் நடிக்கிறார்.

இவரின் நடிப்பில் சீமராஜா, யு டர்ன் ஆகிய இரு படங்களும் செப்டம்பரில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More News >>