பாகமதியில் மிரளவைக்கும் அனுஷ்கா.. டீஸர் உள்ளே..

நடிகை அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியாக இருக்கும் பாகமதி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அனுஷ்காவின் நடிப்பு மிரளவைக்கும் வகையில் இருப்பதாக டீஸரை பார்த்த ரசிகர்கள் பாராட்டி தள்ளுகின்றனர்.

அனுஷ்கா சமீபத்தில் நடித்து வெளியான பாகுபலி2 படம் அமோக வெற்றி பெற்று, பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுஷ்காவின் நடிப்பு பெறிதும் பேசப்பட்டது. இதுபோன்ற படங்களில் நடிப்பதில் தான் அனுஷ்காவும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், அனுஷ்கா அடுத்ததாக பாகமதி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அனுஷ்காவின் பிறந்த நாளன்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தற்போது, பாகமதி படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் இந்த படத்தில் அனுஷ்கா, உன்னி முகுந்தன் ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.அசோக் இயக்கி இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More News >>