ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டது கீழ்தரமான செயல் - மு.க.ஸ்டாலின்

அரசியலுக்காக வீடியோவை வெளியிட்டது கீழ்தரமான செயல் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை அப்போது அவர் சிகிச்சை பெறும்போதே வெளியிட்டிருந்தால் இந்த பிரச்சனை இப்படி வந்திருக்காது. ஜெயலலிதா மரணத்தை பொறுத்தவரையில் அவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக நினைத்தேன்.

ஆனால் ஜெயலலிதா மரணத்தை இப்படி அரசியலுக்கு பயன்படுத்தும் அளவுக்கு இவ்வளவு கீழ்தரமாக இருப்பார்கள் என நினைக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயிலலிதா சிகிச்சை வீடியோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

தேர்தல் ஆணையம் ரூ.6000 பணம்பட்டுவாடா செய்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் இது மாதிரியான நிலை வந்திருக்காது. இப்போது வீடியோவை வெளியிட்டுள்ளார்கள், ஆகவே தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

More News >>