நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம்
நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் மெரினாவில் அண்ணா சதுக்கம் பின்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதியின் சமாதிக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்பட பொது மக்கள் என தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து மரியாதை செலுத்தி செல்கின்றனர்.
இந்நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை நினைவேந்தல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மாலை காமராஜர் அரங்கில் நினைவேந்தர் கூட்டம் நடைபெற்றது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர், விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இவர்களை தவிர, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைத்துறையை சேர்ந்த பலர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில், கருணாநிதியின் அரசியல், கலை பயணங்கள், அவரது நினைவலைகள் குறித்து நடிகர் உள்பட பலர் பகிர்ந்துக் கொண்டனர்.