இமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத கனமழை: 16 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் கனமழை எதிரொலியால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் மாநிலங்களை தொடர்ந்து தற்போது வடமாநிலங்களில் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை, இடைவிடாத அடைமழையும் பெய்து வருகிறது.

இதன் எதிரொலியால் பல இடங்களில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகள் பல நிலச்சரிவில் சிக்கி பலத்த சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “இமாச்சல பிரதேச மாநிலத்தில் 117 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. சஜன்பூர் திரா பகுதியில் ஒரே நாளில் 307 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இமாச்சல பிரதேசத்தில் நேற்று 73.8 மி.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் ” என குறிப்பிட்டது.

அடைமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு எதரொலியால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>