வீடியோவை வெளியிட்டத்தை சசிகலா ஏற்று கொள்வார் - திவாகரன் மகன்

வெற்றிவேல் வீடியோ வெளியிட்டத்தை சசிகலா ஏற்று கொள்வார் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்புத் தொற்றிக் கொண்டுள்ளது.

முன்னதாக ஜெயலலிதா மரணத்தை இப்படி அரசியலுக்கு பயன்படுத்தும் அளவுக்கு இவ்வளவு கீழ்தரமாக இருப்பார்கள் என நினைக்கவில்லை என்று ஸ்டாலினும், வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியாவும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த், ”ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல் வெளியிடப்பட்டதால் வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். வீடியோவை வெளியிட்டத்தை சசிகலா ஏற்று கொள்வார். வீடியோ வெளியிட்டது குறித்து சசிகலா, தினகரனுக்கு தெரியாது.

வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து சர்வதேச அளவில் ஆய்வு நடத்தலாம். வீடியோ வெளியிட்டத்தை எங்களது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தவறு என்று கூறி உள்ளார்கள். ஒரு சிலர் தவறு என கூறுவது முக்கியமா? தொண்டர்களின் நிம்மதி முக்கியமா?” என்று தெரிவித்துள்ளார்.

More News >>