உடலுக்கு குளிர்ச்சி தரும் நாட்டு பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய வகைகள் உண்டு. அதில், நாட்டுப் பொன்னாங்கண்ணி கீரை சமையலுக்குப் பயன்படுகிறது. குளிர்ச்சித்தன்மை கொண்ட இந்த கீரையில், சுவையான சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

கோதுமை மாவு - 500 கிராம்

பொன்னாங்கண்ணிக்கீரை - 2 கப் (பொடியாக நறுக்கியது)

வெண்ணெய் - 4 டீஸ்பூன்

வெள்ளை எள் - 2 டீஸ்பூன்

ஓமம் - 2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் கோதுமை மாவுடன் வெண்ணெய், எள், ஓமம், சிறிதளவு உப்பு போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். பின் பொன்னாங்கண்ணிக்கீரையில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி வதக்கி, மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சப்பாத்தி மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, பிசைந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்பு அதனை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்.

கடைசியாக, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேக விட்டு எடுத்தால் வித்தியாசமான சுவையில் பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி ரெடி..!

More News >>