சத்தீஸ்கர் மாநில கவர்னர் பல்ராம்ஜி தாஸ் காலமானார்

சத்தீஸ்கர் மாநில கவர்னரும், பாஜக நிறுவனர்களில் ஒருவருமான பல்ராம்ஜி தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

பாஜக நிறுவனர்களில் ஒருவர் பால்ராம்ஜி தாஸ் (90). இவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வந்தார். பஞ்சாப் மாநில துணை முதல்வராக இருந்த பல்ராம்ஜி 6 முறை எம்.எல்.ஏ பதவியும் வகித்து வந்தார்.

இவரது வயது முதர்வு காரணமாக திடீரென இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், பல்ராம்ஜி தாசை மீட்டு இன்று காலை உடனடியாக அம்மாநில அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பல்ராம்ஜி சிகிச்சை பலனின்றி கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

More News >>