பக்தர்கள் வருகை குறைவு.. வெறிச்சோடிய திருப்பதி !

கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தர்கள் வருகை குறைந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.  திருப்பதி ஏழுமலையான் கோவில் வரும்  16ம் தேதி காலை பத்து மணியிலிருந்து 12  மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து யாகம் நடைபெறும் நேரத்தை தவிர மற்ற நேரத்தில் குறைவான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.    12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கோவிலுக்குள் யாகங்கள் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவே அதிக அளவில் பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் பக்தர்கள் வருகை குறைவாகவே உள்ளது.    இதனால் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரத்திற்குள்ளாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் குறைவு காரணமாக தலைமுடி காணிக்கை கொடுக்கும் இடம்,ஓய்வுஅறைகளுக்கும் இடம், அன்னதான கூடம், கடைத் தெருக்கள், என திருமலையே வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று ஒரு நாளில் 24 ஆயிரத்து 466 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் நேற்று என்ன பட்ட உண்டியல் காணிக்கை வருமானம் ஒரு கோடியே பதினைந்து லட்சம் வந்துள்ளது.
More News >>