ஒன்றன் பின் ஒன்றாக.. செக்க சிவந்த வானம் போஸ்டர்கள் ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம் படத்தின் போஸ்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸ் செய்யப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் தற்போது இயக்கிவரும் படம் செக்க சிவந்த வானம். அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, மன்சூர் அலிகான், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், என பிரபல நடிகர்கள் நடித்து வெளியாக இருக்கும் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தை செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது. நேற்று அரவிந்த் சாமியின் போஸ்டர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது, இன்று மேலும் ஒரு கதாபாத்திரமான அருண் விஜய்யின் போஸ்டர் வெளிவந்துள்ளது. நாளை யாருடைய போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

More News >>