பழித்தீர்த்த மர்மநபர்கள்: அரசு அதிகாரி சுட்டுக் கொலை
முன்விரோதம் காரணமாக பீகாரில் அரசு அதிகாரி ஒருவரை மர்மநபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் அரசின் திட்டமிடல் இலாகாவில் செயலாளராக பணியாற்றி வந்தவர் ராஜீவ் குமார் (50). இவர், தனது குடும்பத்துடன் பாட்னா நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை ராஜீவ் குமார் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், ராஜீவ் குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். இதில், ராஜீவ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனால், ராஜீவ் குமாரின் மனைவி, மர்ம கும்பல் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதாகவும், அப்போது தடுக்க முயன்ற தனது கணவரை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ராஜீவ் குமாரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர் என்றும் ஆனால் இதனை அவரது குடும்பத்தினர் மறைக்கிறார்கள் என்று சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.