இசைப்புயலின் இசையில் மீண்டும் சூப்பர் ஸ்டார்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஏ ஆர் ரஹ்மானுடன் சேர்ந்து பாடுகிறார் ரஜினி.

மன்னன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் அடிக்குது குளிர் என்ற பாடல் பாடி அசத்தி இருந்தார். பின் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான முழு அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான் திரைப்படத்தில் பாடினார் சூப்பர் ஸ்டார்.

இந்நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் இசைப்புயலுடன் சேர்ந்து பாடவுள்ளார். இருவரும் என்ன பாடல் பாடப்போகின்றனர் என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அது சரி ஏன் இந்த ஆச்சர்ய தகவல் என்று ஆராய்ந்தால், ஆஸ்கர் நாயகன் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி 25 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த இசைப்பயணத்தை பாராட்டும் வகையில் அவருக்கு, டில்லியில் கண்கவரும் கலை நிகழ்ச்சிகளுடன் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் ரஜினி பங்கேற்க உள்ளார் இருவரும் இணைந்து பாடல் ஒன்று பாடவுள்ளனர் என்ற இனிப்பான தகவலும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More News >>