3 மாதத்தில் 2வது தூக்கு தண்டனை: மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மூன்று நாளில் தீர்ப்பு வழங்கி மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரேக்களி நகர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானால். அதற்கு காரணமான நரேஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சுதன்சு சக்சேனா நரேஷ்க்கு தூக்கு தண்டனை விதித்தார்.
மத்திய பிரதேச மாநில சட்டசபையில் கடந்த டிசம்பர் மாதம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து அதனை மசோதாவாக ஒருமனதாக நிறைவேற்றியது. இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி தூக்கு தண்டனை அல்லது மரணதண்டனை கொடுக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷ்க்கு விசாரணை முடிந்த 3 தினங்களில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது சாதனையாக கருதப்படுகிறது.
மத்திய பிரதேச மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் இதே மாதிரி ஒரு வழக்கில் ஒரு நபருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.