கவர்ச்சி கைகொடுக்கவில்லையாம்.. அதான் இந்த கெட்டப்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்துள்ளார் ராய் லட்சுமி. தமிழில் இவர் நடித்து வெளியே வந்த முதல் திரைப்படம் "கற்க கசடற".

இந்தியில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த அகிரா திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து இருந்தார் ராய் லட்சுமி. அவர் சமீபத்தில் ஹிந்தியில் ஹீரோயினாக நடித்து பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி வெளியான திரைப்படம் ஜூலி 2.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு திரைப்படத்தின் வெற்றி இல்லை என்ற செய்தி ராய் லட்சுமியை சற்று சோகத்தில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தார் ராய். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு புதிய படத்தில் ராய் லட்சுமி அதிரடி போலீசாக நடிக்க உள்ளார். கவர்ச்சி கை கொடுக்கவில்லை காவல்துறை கை கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

More News >>