சோசியல் மீடியாவுக்கு அவல் போட்டnbsp அமித்ஷா.. காங்கிரஸ் கிண்டல்

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக கீழே இறக்கும் கயிறை பிடித்து இழுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  72-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  ஆனால், தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக அமித் ஷா இறக்கியதால், சிலநிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.   தேசியக் கொடியை மேலே ஏற்றுவதற்கு ஏதுவாக கயிறு சரி செய்யப்பட்டு அமித்ஷாவிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அமித் ஷா தேசியக் கொடியை மேலேஏற்றுவதற்கு பதிலாக, தவறுதலாக இறக்கும் கொடியை பிடித்து இழுக்கத் தொடங்கினார். இதனால், மேலே நிறுத்தப்பட்டு இருந்த தேசியக் கொடி திடீரென கீழே இறங்கி வந்தது.   இதைப்பார்த்த சிலர் கைதட்டினாலும், பலர் சத்தமிட்டனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமித் ஷா அவசர, அவசரமாக கயிற்றைப் பிடித்து மேலே இழுத்து, தேசியக்கொடியை ஏற்றினார். அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   இந்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்த காங்கிரஸ் கட்சியினர், "கொடியை கையாள தெரியாதவர்கள், நாட்டை எப்படி வழிநடத்துவார்கள். தேசப்பற்றாளர்கள் என சான்றளித்துக் கொள்ளும் சிலருக்கு, தேசிய கீதத்தின் மரபுகள் கூட தெரியவில்லை” எனக் கிண்டல் செய்து வருகின்றனர்.
More News >>