கனமழை ரயில் சேவையில் கடும் பாதிப்பு!

திருநெல்வேலி - கன்னியாகுமரி மார்கத்தில் கனமழை பெய்துவருவதால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ரெட் அலெட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, நேற்று 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல இன்றும் ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை - கொல்லம் (56335/56336) பயணிகள் ரயில், நெல்லை - நாகர்கேவில் (56718) பயணிகள் ரயில்,புனலூர் - கொல்லம் - புனலூர் ரயில், கொல்லம் - புனலூர்- கொல்லம் ரயில், புனலூர் - கன்னியாகுமரி, புனலூர் ரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட சென்னை - திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் பாலக்காடு வரை மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், எர்ணா குளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

More News >>