முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.
கடந்த ஜூன் மாதம் முதல், 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் இன்று மாலை 05.05-க்கு மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் 3 முறை பிரதமராக இருந்தவர். 12 முறை எம்.பியாக இருந்தவர். அவர் பாரத ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்க்கது.