வாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல்
உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வாஜ்பாயின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று இரவு அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும் என தெரிவித்தார்.இவர்களை தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்டோர் தங்களின் இரங்கலை தெரிவித்தனர்.