கேரளாவிற்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கியது ஒடிசா அரசு
கேரளாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள கேரளவிற்கு ரூ.5 கோடி நிவாரண நிதியை ஒடிசா அரசு வழங்கியது.
கேரளா மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், அணைகள், ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அங்குள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவற்றால் கேரளா மாநிலம் சுமார் 8 ஆயிரம் கோடி மதிப்பிற்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கேரளா மாநிலத்திற்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்தது. இதேபோல், பல்வேறு மாநிலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவை நிவாரண நிதிகள் வழங்கி உதவி வருகிறது.
இந்நிலையில், கேரளா மாநிலத்திற்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கி உள்ளார். இதைதவிர, கேரளா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் தயார் என்றும் ஒடிசா மாநில முதல்வர் உறுதி அளித்துள்ளார்.