பிரகாசபுரம் செயிண்ட் மேரிஸ் ஆலயத் திருவிழா!
தூத்துக்குடி மாவட்டம், பிரகாசபுரத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் சர்ச்சில் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத் திருவிழா ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் திருவுருவப் பவனி ஆகஸ்ட்டு மாதம் 5-ஆம் தேதி நடைபெற்று திருவிழா நிறைவு பெற்றது. இது அந்த பேராலயத்தின் 436-ஆம் ஆண்டு திருவிழாவாகும்.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் திருவிழா நிறைவு பெற்று, அங்கு கொடி இறக்கப்பட்ட பின்னர் அப்பகுதியில், உள்ள பிற தேவாலயங்களில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அவ்வாறே, தூத்துக்குடி மாவட்டம், பிரகாசபுரத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் சர்ச்சில் ஆகஸ்ட்டு 6-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளாள மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் பவனி 9-ஆம் நாள் (14-ஆம் தேதி) இரவு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட்டு 15-ஆம் தேதி காலையும் தேர் பவனி நடைபெற்றது. மாலையில் பட்டாசு வெடித்து திருவிழா இனிதே நிறைவு செய்யப்பட்டது.