சுதந்திர தினத்தை ஒட்டி காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் சிறை சென்றவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமான காமராசர் சிலைக்கு தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் பரமன்குறிச்சி மு.லோகநாதன் மாலை அணிசித்து மரியாதை செலுத்தினார்.
பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் போற்றப்படுபவர் காமராசர். அவர்கள் வாழ்ந்து மறைந்த தி.நகர் இல்லத்தில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு, 72-வது சுதந்திர தினத்தை ஒட்டி தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் பரமன்குறிச்சி மு.லோகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.