வாஜ்பாய் மறைவு: தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையட்டி, நாளை பொது விடுமுறை விடுத்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வாஜ்பாயின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று இரவு அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட அரசியலின் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.வாஜ்பாய் மறைவுக்கு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளன.
இதையடுத்து, தமிழகத்தில் நாளை பொது விடுமுறை விடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், வாஜ்பாயின் மறைவுக்காக ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.