வாஜ்பாயின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
உடல்நலக் குறைவால் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு நாட்டிற்கும், பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பு. தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றும் வாஜ்பாய் பெயரை நினைவுபடுத்தும். ஜனநாயகத்தின் பக்கம் நின்று தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடிய வாஜ்பாய் அவர்களின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.