ராயப்பேட்டையில் புத்தக கண்காட்சி தொடங்கியது
ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் 10 நாட்கள் புத்தகக் கண்காட்சி தொடங்கியது.
ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் 10 நாள் புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்கியது. இந்த கண்காட்சியை, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
வரும் 27ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சி, சுமார் 200க்கும் அதிகமான அரங்குகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில், ஒரு கோடி புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.புத்தக பிரியர்கள் ஏரோளமானோர் இங்கு வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.