ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி ஓர் பார்வை...

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகின்றது. இந்தத் தொகுதி உறுவானதில் இருந்து இன்று நடைபெறும் தேர்தல் வரையிலான முக்கிய நிகழ்வுகள். இதோ,

1973 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பால் உருவானது ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இது 2015, 2016, 2017 என அடுத்தடுத்த ஆண்டுகளில் தேர்தலை சந்தித்துவரும் ஒரே தொகுதி இதுவாகும்.

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கியபின்னர், 1977 ஆம் ஆண்டில்தான் முதல் தேர்தலை சந்தித்தது ஆர்.கே.நகர் தொகுதி. இந்த பொதுத் தேர்தலில் சென்னையில் அ.தி.மு.க வெற்றி பெற்ற ஒரே தொகுதி ஆர்.கே. நகர் தான். அக்கட்சி சார்பில், நகைச்சுவை நடிகர் ஐசரிவேலன் இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

ஆர்.கே.நகர் 1977 முதல் 2016 வரை 10 பொதுத் தேர்தலையும் 2015-ல் ஒரு இடைத் தேர்தலையும் சந்தித்துள்ளது. 1977, 1991, 2001, 2006, 2011, 2015, 2016 என 7 முறை இந்த தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிபெற்றுள்ளது. 1980 ல் திமுக ஆதரவுடனும், 1984ல் அதிமுக ஆதரவுடனும் காங்கிரஸ் வென்றது. 1989, 1996ல் தி.மு.க. வென்றது.

2015-ல் நடைபெற்ற இடைத்தேர்தல், 2016 பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றார். எனவே, இரண்டு ஆண்டுகள் ஆர்.கே.நகர் முதலமைச்சர் தொகுதியாக இருந்தது.

ஆர்.கே. நகரில் தற்போது, 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 903 பேர். பெண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 232 பேர். திருநங்கையர்கள் 99 பேர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பலர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கும் பரபரப்புக்கும் இடையில் இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஞாயிற்றுக் கிழமைவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News >>