பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்டு 28ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
கேரளா மாநிலத்தில் கனமழை நீடித்து வருவதால் ஆகஸ்டு 28ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடானது. அணைகள், ஏரிகள் நிரம்பி வழிந்தோடுகிறது. இதன் எதிரொலியாக, பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவு ஆங்காங்கே ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகள் பல சேதமடைந்துள்ளன.
இதனால், கேரளாவில் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் எதிரொலியாக, பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை நீட்டித்து வரும் 28ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
மேலும், நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு குறித்த தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.