திமிங்கலங்களை கரைக்கு இழுத்துவந்து கொல்லும் வினோத திருவிழா !
டென்மார்க்கில் உள்ள தீவு மக்கள் நூற்றுக்கணக்கான திமிங்கங்களை இழுத்து வந்து கொன்று குவிக்கும் வினோத திருவிழா சமீபத்தில் நடைபெற்றது.
டென்மார்க்கில் உள்ள தீவு ஒன்றில் வாழும் மக்கள் ஆண்டுதோறும், கோடை காலத்தின் முடிவில் வினோதமான திருவிழா ஒன்றை கொண்டாடி வருகின்றனர்.
இந்த திருவிழாவில், தீவில் வாழும் மக்கள் கூட்டம் கூட்டமாக கடலுக்கு சென்று அங்கு வாழும் திமிங்கலங்களை கரைக்கு இழுத்துவந்து, அதனை கொன்று குவித்து திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
இதுபோன்று, சமீபத்தில் நடைபெற்ற இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்களை கொன்று குவித்ததால் டென்மார்க் கடல் ரத்த ஆறாக மாறியுள்ளது.
இந்த திருவிழாவில் உயிரினத்தை கொல்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அதைப்பற்றி கவலைப்படாமல் அத்தீவு மக்கள் ஆண்டுதோறும் இத்திருவிழாவை நடத்தி மகிழ்ந்து வருகின்றனர்.