ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்த பாதிரியார்கள்?

பென்சில்வேனியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை 300 ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கிறிஸ்தவ மதத்தின் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்கள். தங்களது அனைத்துவித சுய விருப்பங்களையும் தவிர்த்து, கடவுளுக்கு தங்களை அர்ப்பணிப்பதற்காகவே இந்த அந்தஸ்து அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனாலேயே, கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, பிற மதத்தினரும் கூட பாதிரியார்கள் மீது தனி மரியாதை காட்டி வருகின்றனர்.

ஆனால், பென்சில்வேனியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை அனைத்து எண்ணங்களையும் தகர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த ஆய்வில் கடந்த 1947-ம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் 300 பாதிரியார்களால் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் குறித்த தெளிவான எண்ணிக்கை கிடைக்கவில்லை எனவும், ஒருவேளை அவர்கள் அச்சத்தினால் வெளியே சொல்ல தயங்கலாம் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

கடவுளின் மனிதர்கள் என தங்களை உருவகப்படுத்திக் கொள்ளும் இந்த பாதிரியார்கள் இதுபோன்ற மாபாதக செயல்களில் ஈடுபட்டது மட்டுமின்றி, தாங்கள் எதுவுமே செய்யவில்லை எனவும் கபடநாடகம் ஆடுவதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும், கிறிஸ்தவ மதத்தின் புனிதம் பாதிக்கப்பட்டு விடும் உள்ளிட்ட சில காரணங்களுக்காக இந்த பாதிரியார்களை ஆர்ச் பிஷப் போன்ற தலைமை பாதிரியார்கள் பாதுகாத்து வந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாகும்.

More News >>