மக்கள் விரும்பும் மாற்றத்தை தருவார் ராகுல் - ராபர்ட் வதேரா
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரோ, குடும்பத்தினருடன் திருப்பதி வந்திருந்தார். அதிகாலை மலையப்பர் சுவாமியை அவர் தரிசனம் செய்தார்.
பின்னர் பேசிய ராபர்ட் வதேரா, ஏழுமலையானை சிறப்பான முறையில் தரிசித்த நான், என்னுடைய குடும்பத்தார், என்னுடைய அத்தை ஆகியோர் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்"
“நாட்டு மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ அருள் புரிய வேண்டும் என்றும் ஏழுமலையான் வேண்டிக்கொண்டேன். எங்களுக்கு தேவையான அன்பு ஆதரவு ஆகியவை நாட்டின் அனைத்து பகுதி மக்களிடம் இருந்து கிடைக்கிறது."
"நாட்டில் பெரிய அளவிலான மாற்றம் வரும். அந்த மாற்றத்தை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ராகுல்காந்தி கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார். இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் விரைவில் வரும்.""மிகவும் சிரமத்தை அனுபவித்த மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நாங்களும் மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறோம்." என ராபர்ட் வதேரா தெரிவித்தார்.