கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி- பிரதமர் அறிவிப்பு
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்ட முயன்றார்.
அப்போது, ஹெலிக்காப்டரில் பார்வையிட தன் பயணத்தைத் தொடங்கினார் ஆனால், கடுமையான மழை பெய்ததால் அவர் சென்ற ஹைலிக்காப்டர் திரும்பவும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி கொச்சியில் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆளுநர் சதாசிவம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.