ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் காலமானார். அவருக்கு வயது 80.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். 1938-ஆம் ஆண்டு கானா நாட்டில் பிறந்த இவர் 1997-ஆம் அண்டு முதல் 2006-ஆம் ஆண்டுவரை ஐநா பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்.
அவருக்கு, சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததவர் என்று ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த கோபி அன்னான் இன்று மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.