வங்கி ஊழியர்கள் அறிவித்த வேலைநிறுத்தம் வாபஸ்

புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

ஊதிய ஒப்பந்த கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 27ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து, வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை மத்திய அரசு நேற்று நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

டெல்லியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தில் மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நல கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு வெங்கடாசலம் கூறுகையில், “ ஒரு மாதத்துக்குள் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனால், வரும் 27ம் தேதி நடைபெற இருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும்” என்றார்.

More News >>