கேரளாவிற்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி
கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கேரளாவில் வீடு ,உடை ,உணவு என அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே, கமல், சூர்யா, விஷால் உள்பட பல நடிகர்கள் கேரள மாநிலத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.
அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தும் கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதேபோல, நடிகரும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி கேரள மாநிலத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.