தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் டாப்சி?... மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆடுகளம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை டாப்சி. அதனைத் தொடர்நது, வந்தான் வென்றான், ஆரம்பம், உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வந்தார்.
எனினும் அவரால், தமிழில் பெரியதொரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்குப் படங்களிலும் நடித்துவந்த டாப்சி இந்தி நடிகையானார்.
இப்போது டாப்சியிடம், இந்தி படங்களே நான்கு இருப்பதாகத் தகவல், அவர் படங்களை தேர்ந்தெடுக்கும் விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கில் வெளியாகி மாஸ் காட்டிய ஆர்.எக்ஸ்100 படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆதிக்கு ஜோடியாக டாப்சியை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அவர் தமிழில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.