கொள்ளிடம் பழைய பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு (வீடியோ)

கொள்ளிடம் பழைய பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் தண்ணீரில் மூழ்கிய காட்சி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியதை அடுத்து பாதுகாப்பை கருதி திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் காவிரி நீர் வந்த வண்ணம் உள்ளது.

இதன் எதிரொலியாக, முக்கொம்பு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், பாதுகாப்பு கருதி அணை திறந்துவிடப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த ஆற்றின் குறுக்கே, 1928ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்பு பாலம் ஏற்கனவே சேதம் அடைந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் அழுத்தம் தாங்க முடியாமல் பாலத்தின் தூண்களில் விரிசல் அதிகமானது.

இதனால், கொள்ளிடம் பழைய பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாலத்தின் 18வது மற்றும் 20வது தூண்கள் இடிந்து தண்ணீரில் மூழ்கியது. பாலம் நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாலத்தின் தூண்கள் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

More News >>