ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாட்பபடுகிறது. இதனால், டெல்லியில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இவர்களை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.