இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 450க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் நேற்று மீண்டும் அடுத்ததடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேஷியா மக்கள் பீதியில் உறைந்தனர்.
நேற்று காலை ஜகர்தாவில் இருந்து சுமார் 1500 தொலைவில் இருந்த ஒரு தீவு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெலெண்டிங் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இதே போல் நேற்று மாலை லோம்பாக் தீவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கடலும் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. இருந்தும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாததால் மக்கள் சற்று பெருமூச்சு விட்டனர்.
இதன் எதிரொலியாக, நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.