ஸ்டெர்லைட் வழக்கு...நீதிபதி வசம் ஒப்படைப்பா...?

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வசம் ஒப்படைக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்  வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை, பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே. கோயல்  விசாரித்து வருகிறார். இன்றைய விசாரணையின் போது, வழக்கை, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரிடம் ஒப்படைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.   இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிவசுப்ரமணியன், மற்றும் சந்துரு ஆகியோரது பெயரையும் நீதிபதி முன்மொழிந்தார்.  தமிழக அரசு தரப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவை விசாரணை அதிகாரியாக ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.   இதனிடையே, வேதாந்தா குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், வேறொரு வழக்கில் ஆஜராவதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளதால், விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.    வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட்டில் இருந்து காப்பர் கழிவுகள் கொட்டப்படுவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை கவனத்தில் கொண்ட நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
More News >>