சர்வதேச சாதனைக்கான அங்கீகாரம்: இறுதி பட்டியலில் நடிகர் விஜய்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் மெர்சல். விஜய் இரண்டாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்து தீபாவளிக்கு சரவெடியாக வெளிவந்தது. பல தரப்பில் இருந்து தடங்கல்கள் சர்ச்சைகள் எதிர்ப்புகள்களை சந்தித்த மெர்சல் திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியடைந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி பற்றிய ஒரு வசனம் பேசியதும் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
மெர்சல் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 100வது திரைப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் சம்ம ஹிட் அடித்தன. ஆளப்போறன் தமிழன் பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது.
தற்போது மெர்சல் படத்தில் நடித்ததற்காக தளபதி விஜய் சர்வதேச விருது பெற தேர்வாகியுள்ளார். இதன் முடிவுகள் செப்டம்பர் மாதம் 22ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ளார்.
ஐ .ஏ.ஆர்.ஏ என்ற ஒரு அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி வரும் விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. அதில் இரு பிரிவுகளின் கீழ் நடிகர் விஜய் மெர்சல் படத்தில் நடித்ததற்காக பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வெளிநாட்டு நடிகர் பட்டியலில் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது இந்திய நடிகர் ஒருவரின் பெயர் சர்வதேச சாதனைக்கான விருது பெறுவதில் இடம்பிடிப்பது இது முதல் முறை.
அதில் தற்போது சிறந்த வெளிநாட்டு நடிகர் பிரிவில் இறுதி பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் தளபதி விஜய்.