கல்லூரிகளில் செல்போனுக்கு தடை: உத்தரவு வாபஸ்

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  கல்லூரி மாணவர்களுக்கு ஆடை கட்டுபாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில கல்லூரிகள் இந்த கட்டுபாடுகளை கடுமையாக பின்பற்றி வரும் நிலையில், பெரும்பாலான கல்லூரிகள் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில்லை என கூறப்படுகிறது.    சமீபத்தில், தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து, கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம்  உத்தரவு பிறப்பித்தது.    செல்போனால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்க இந்த முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருக்கிறது. தற்போது கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.   இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. உடனடியாக செல்போன் தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனை தொடர்ந்து, செல்போன் தடை விதிக்கும்  உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறி,  இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
More News >>