ரூ.700 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்

மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான, கேரள மாநிலத்திற்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன் வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.

கேரள மாநிலத்திற்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு கடும் சேதமடைந்துள்ளது. மத்திய அரசு ரூ.100 கோடி நிதி வழங்கிய நிலையில், பிற மாநிலங்களும் கேரள மாநிலத்திற்கு உதவி வருகின்றன.

இதைதவிர, உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகள் நிதி வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், மழை வெள்ளத்தால் பாதித்துள்ள கேரளாவுக்கு ரூ.700 கோடி உதவ முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர் கூறுகையில், தங்களது வெற்றியில் கேரள மக்களுக்கு எப்போதும் பங்கு உள்ளது. கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை. இதற்காக, சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

More News >>