அரசு செலவில் ஜப்பானுக்குச் செல்லும் அமைச்சர் ஜெயக்குமார்!

20-ஆவது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு, “ஜப்பானில் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிவரை, 20-ஆவது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) நடத்துகிறது.

இந்த கண்காட்சியில், மீன்வளத்துறை இயக்குனர் ஜி.எஸ்.சமீரான், ராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோருடன் சென்று கலந்து கொள்வதற்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு அரசு அனுமதி அளிக்கிறது.

இந்த பயணத்துக்கு ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும். அவர் சுற்றுலா செல்லும் இந்தக் காலகட்டம். அவரது பணிகாலமாக கருதப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>