ஐஜி மீதான பெண் எஸ்.பியின் பாலியல் புகார்... நாளை விசாரணை

தமிழக ஐஜி மீது பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகார் குறித்து, காவல்துறையினர் விசாகா குழு நாளை விசாரணையை தொடங்குகிறது.

காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகள் குறித்த புகார்களை விசாரிக்க கூடுதல் காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது

இந்த குழுவின் உறுப்பினர்களாக கூடுதல் காவல் துறை இயக்குனர் அருணாசலம், காவல்துறை துணை தலைவர் தேன்மொழி உட்பட 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு அமைக்கப்பட்ட முதல் நாளே லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் பெண் எஸ் பி ஒருவர் அதே துறையில் பணியாற்றும் ஐஜி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அலுவலக விஷயம் தொடர்பாக ஐஜியின் அறைக்கு சென்றபோது பெண் எஸ் பி யை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றச்சாற்று எழுந்தது இது காவல்துறை வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காவல்துறையின் விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் நாளை பட்டினப்பாக்கத்தில் உள்ள மாநில குற்ற. ஆவணக் காப்பகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பெண் எஸ்பி அளித்த புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு நிரூபணமானால் சம்பந்தப்பட்ட ஐஜி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து, உரிய விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மகளிர் அமைப்பினரின் வலியுறுத்தலாக உள்ளது.

More News >>