கல கல மெட்ராஸ் டே வாழ்த்து: ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்
மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு வாழ்த்துகளை தெரிவித்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்துள்ளார்.
மெட்ராஸ் டே இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டு அசத்தி உள்ளார். ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது முதல் அவ்வபோடு தமிழில் ட்வீட் போட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.
அந்த வகையில், மெட்ராஸ் டே முன்னிட்டு ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்துகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இதோ அந்த ட்வீட்..
கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேருபரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோருஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன்
என ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.