தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. தமிழகம் பொறுத்தவரையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 26ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், மாலை அல்லது இரவு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.