அஜித்தின் விசுவாசம் பர்ஸ்ட் லுக் நாளை அதிகாலை ரிலீஸ்
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை அதிகாலை ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் விசுவாசம். டி.இமான் இசையில் வெளியாகி வரும் இந்த படத்தில், அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை அதிகாலை 3.40 மணிக்கு வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அஜித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.