மும்பை பரேல் தீ விபத்து: கட்டுமான அதிபர் கைது

மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பான வழக்கில் போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலவை கைது செய்தனர்.

மும்பை பரேலில் உள்ள கிறிஸ்டல் டவரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, இந்த கட்டிடத்திற்கு மாநகராட்சியிட்ம் அனுமதி சான்றிதழ்களை பெறாமலேயே கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலா கட்டிடத்தை கட்டி, வீடு வாங்கிய 58 குடும்பத்தினரை குடியமர்த்தி உள்ளார்.

இதுகுறித்து ஏற்கனவே மாநகராட்சிக்கு தெரியவந்த நிலையில், 2016ம் ஆண்வே குடியிருப்பு வாசிகளை வெளியேற்றகோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், யாரும் வீடு காலி செய்யாததை அடுத்து, இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை கைது செய்து போய்வாடா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, வரும் 27ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

More News >>