அதிமுக செயற்குழுவில் சலசலப்பு

சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் அதிருப்தி பேச்சால், சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

அதிமுக செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எம்.எல்.ஏ போஸ் ஆகியோர் மற்றும் கேரள மழை வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் என நால்வரும் பேசிய பிறகு முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாச்சலம், தன்னுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் வகையில் பேச முயன்றார்.

கட்சியில் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று பேச தொடங்கும்போதே... மூத்த நிர்வாகிகள் குறுக்கிட்டு செயற்குழுவில் மற்ற விஷயங்களை பேசினால், அதுதான் வெளியில் பெரிதாக பேசப்படும், செயற்குழுவின் தீர்மானங்கள் வெளியில் தெரியாது என்று அவரை சமாதானப்படுத்தினர்.

மூத்த நிர்வாகிகளிடம் அவருடைய கோரிக்கையை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அப்போது தனியே நிர்வாகிகளை சந்தித்த தோப்பு வெங்கடாச்சலத்திடம், இரண்டு நிமிடத்தில், அவருடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டள்ளனர். அதற்கு 2 நிமிடம் போதாது 15 நிமிடங்கள் பேச வேண்டும் என்று தோப்பு வெங்கடாச்சலம் கேட்டுள்ளார்.

அப்போது திங்கள் கிழமை நேரம் ஒதுக்குவதாக நிர்வாகிகள் தெரிவித்து அவரை சமதானப்படுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல தாங்களும் தங்களுடைய ஆதாகங்கத்தை தெரிவிக்க வேண்டுமென மதுரை மண்டலத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜன்செல்லப்பா, எஸ்.டி.கே. ஜக்கையனும் பேச முற்பட்டுள்ளனர் அவர்களையும் மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அமர வைத்துள்ளனர்.

More News >>